×

சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை போர்வெல்களின் மின்இணைப்பு ‘கட்’

அருப்புக்கோட்டை. டிச. 11: அருப்புக்கோட்டை அருகே, சட்டவிரோதமாக குடிநீர் விற்பனை செய்த போர்வெல்களின் மின்இணைப்புகள் உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி அதிகாரிகள் நேற்று துண்டித்தனர்.  அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் ஜெயநகர்  பகுதிகளில் சட்டவிரோதமாக போர்வெல்கள் அமைத்து, அதில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை தடுக்கக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இத மனுவை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட கலெக்டர், தாசில்தார், பிடிஓ ஆகியோர் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட போர்வெல்களுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன்பேரில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாணிக்கவள்ளி, இருளப்பன், சீனிவாசன், ராமசுப்பு, கருப்பசாமி, சுமன் வாட்டர் சப்பை இந்திரா ஆகியோரின் கிணறுகள் மற்றும் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள போர்வெல்களுக்குக் வழங்கப்பட்ட மின்இணைப்புகளை, தாசில்தார் பழனிச்சாமி தலைமையில் மின்வாரியத்துறையினர் நேற்று துண்டித்தனர். இதில், மண்டல துணை தாசில்தார் ராஜீவ்காந்தி, மின்பொறியாளர் ஊரகம் சரவணன், மின் வாரிய பணியாளர்கள் மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.

Tags : drinking water sales borewells ,
× RELATED கம்பிக்குடி கிராமத்தில் 10 ஏக்கர்...